கணவரை இழந்த பெண்களை குறிவைத்து ஏமாற்றும் கும்பல்

கணவரை இழந்த பெண்களை குறிவைத்து ஏமாற்றும் கும்பல்
கணவரை இழந்த பெண்களை குறிவைத்து ஏமாற்றும் கும்பல்
Published on

கணவரை இழந்த பெண்களை குறிவைத்து ஏமாற்றிய 53 வயதான புருஷோத்தமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த திருமண தகவல் மையம் ‘மெட்டி ஒலி’. கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்பில் செயல்பட்டு வந்ததால் பல பெண்களும் இதனை தொடர்பு கொண்டிருக்கின்றனர். அப்படி மறுமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களிடம், தனக்கு பல கோடி ரூபாய் மதிப்புகள் சொத்துகள் இருப்பதாக கூறி புருஷோத்தமன் அப்பெண்களிடம் ஆசை வார்த்தை காட்டியிருக்கிறார். பின்னர் அப்பெண்களை திருமணம் செய்துவிட்டு அவர்களிடம் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் போத்தனூர் காவல்துறையினரால் புஷோத்தமன் கைது செய்யப்பட்டார். இவர் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவர்.

தமிழகப் பெண்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களையும் ஏமாற்றி அவர்களிடம் இருந்து புருஷோத்தமன் நகை, பணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது மட்டுமில்லாமல் பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் வங்கி மோசடியிலும் புருஷோத்தமன் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மோசடியில் ஈடுபட்ட புருஷோத்தமன் மகள் கீதாஞ்சலி, ‘மெட்டி ஒலி’ நிறுவனத்தை நடத்தி வந்த மோகனன், வனஜாகுமாரி, புருஷோத்தமனிடம் வேலை பார்த்து வந்த காஜா உசேன், முகமது ஷெரிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் சென்னை, கோவை நீதிமன்றங்களால் பல மோசடி வழக்குகளில் இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டும், தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்ததால், மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா உத்தரவின்பேரில் புருஷோத்தமனை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து  புருஷோத்தமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com