மதுபோதையில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக ஒருவர் கைது

மதுபோதையில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக ஒருவர் கைது
மதுபோதையில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக ஒருவர் கைது
Published on

சங்கரன்கோவிலில் மதுபோதையில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவலார்குளத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் கல்யாணசுந்தரம். இவர், சங்கரன்கோவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல நேற்றிரவு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த கல்யாணசுந்தரம் தகராறு செய்ததோடு பேருந்து மீது கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இச்சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மோகன் அளித்த புகாரின் பேரில் நகர காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர். இவர் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com