தஞ்சை: நிச்சயித்த பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக சித்தரித்ததாக இளைஞர் கைது

தஞ்சை: நிச்சயித்த பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக சித்தரித்ததாக இளைஞர் கைது
தஞ்சை: நிச்சயித்த பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக சித்தரித்ததாக இளைஞர் கைது
Published on

முகநூலில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை மறியல் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுடை நம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளராக இருந்து வந்தார். இவர், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி, கடலூரைச் சேர்ந்த பெண் ஒருவரை நிச்சயம் செய்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து கடந்த மே மாதம் நடைபெற இருந்த திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட பெண்ணே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அறிவுடைநம்பி, அந்த பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் தலைமறைவாக இருந்த அறிவுடைநம்பியை தஞ்சை மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com