சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், எம்.கே.பி.நகர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நசீமா, கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்களான உத்திரகுமார், ஹேமநாதன் உட்பட 9 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மீது ஆபாசமாக திட்டுதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், காயப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 15 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வடக்கு மண்டல வருவாய் கோட்டாட்சியருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பொது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை பாதுகாக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆணையிட்டுள்ளார்.