இருசக்கர வாகனத்தில் சென்றவரை காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் மண்டை உடைந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நாகை காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு- புதுச்சேரி எல்லையில் கடந்த 16ஆம் தேதி வாகன சோதனையின்போது சசிக்குமார் என்ற இளைஞர் காவல்துறையினர் நடவடிக்கைக்கு பயந்து இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கியதாகத் தெரிகிறது. அப்போது காவலர் ஒருவர் தனது கையில் இருந்த லத்தியை சசிக்குமாரை நோக்கி வீசியுள்ளார். லத்தி சசிகுமாரின் மணடையில் பட்டதில் அவர் மண்டை உடைந்தது. காயமடைந்த சசிக்குமார் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், லத்தியால் தாக்கியதில் மண்டை உடைந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நாகை காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: கோவை அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது