ஆற்காட்டில் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி ஃபைனான்சியர் செல்வகுமார் என்கிற கண்ணன் என்பவரது வீட்டில், ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல், வருமான வரித்துறை அதிகாரிகள்போல நடித்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த போலீசார், ஆற்காட்டைச் சேர்ந்த எழிலரசன், பரத், சென்னையைச் சேர்ந்த மது, சையத் மற்றும் வருமான வரித்துறை அலுவலக பணியாளர் ராமகிருஷ்ணா என்பவரையும், சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த முபினா என்ற பெண்ணையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், உடந்தையாக இருந்த நரேன் என்பவரை தேடி வருகின்றனர்.