குழந்தையை சிகப்பாக்க கல்லால் தேய்த்த கொடூரத் தாய்!

குழந்தையை சிகப்பாக்க கல்லால் தேய்த்த கொடூரத் தாய்!
குழந்தையை சிகப்பாக்க கல்லால் தேய்த்த கொடூரத் தாய்!
Published on

சிகப்பு நிறத்தில் மாற்றுவதாக 5 வயது குழந்தை தாயே கல் வைத்து தேய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுதா திவாரி. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்து 3 அரை வயது குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த ஆண் குழந்தைக்கு தற்போது 5 வயதாகிறது. தத்தெடுத்த காலம் முதலே குழந்தையிடம் அன்பின்றி எப்போது கடுமையாக வளர்த்து வந்துள்ளார் சுதா. மற்றவர்களின் குழந்தையை விட தான் வளர்க்கும் குழந்தை சிகப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஆரம்பம் முதலே இருந்துள்ளது. தத்தெடுக்கும் தருணத்தில் குழந்தை சற்று சிகப்பாகத்தான் இருந்ததாம். வளர்ச்சி அடையும் தருவாயிலும், வெப்பநிலையின் அடிப்படையிலும் குழந்தை சற்று நிறம் குறைந்ததுள்ளது. 

இதனால் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பள்ளிக் கூட அனுப்பாமல் வீட்டிலும், பணிக்கு செல்லும் போது தன்னுடனும் அழைத்துச் சென்றுள்ளார் அந்த ஆசிரியை. நாளடைவில் சுதா வீண் கவுரவம் (குழந்தை நிறம்) குழந்தை மீது வெறுப்பாக மாறத்தொடங்கியுள்ளது. குழந்தைக்கு முறையாக உணவு வழங்குவதில்லை. உடல்நிலை சரியாக இருக்கிறதா, குழந்தை சாப்பிட்டதா, ஆரோக்கியமாக உள்ளதா, அதற்கு என்ன வேண்டும் என எதையும் கவனிக்கமால் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தின் மீது வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து வந்துள்ளார் சுதா. 

இதற்கிடையே குழந்தைக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சுதாவின் அக்கா மகள் சோபாதான். சுதாவின் வீட்டுக்கு சோபா வரும் போதெல்லாம், குழந்தையை தூக்கி வைத்துக்கொள்வது அதற்கு உணவளிப்பது, பராமரிப்பது என குழந்தையின் மீது பாசத்தை காட்டி வந்துள்ளார். சித்தி குழந்தையை திட்டும் போதும், அடிக்கும் போது தடுத்துள்ளார். குழந்தைக்கும் ஆறுதலாக இருந்துள்ளார். இது ஒரு தொடர்கதையாக இருந்துள்ளது. 

இந்நிலையில் ஒருநாள் எப்போதும் போல குழந்தையை காண வந்த சோபா அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் அவர் பார்க்கும்போது, சுதா குழந்தை மீது கல் ஒன்றை வைத்து வேகமாக தேய்த்துக்கொண்டிருந்தார். குழந்தை வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டிருந்தது. இதையடுத்து வேகமாக சென்ற தன் சித்தியை தடுத்துள்ளார். அதற்கு “நீ உன் வேலையை பாரு.. குழந்தை இப்படி செய்தால் தான் சிகப்பாக மாறும்” என்று கூறியுள்ளார். தன்னால் குழந்தையை மீட்க முடியவில்லை என்பதால், சோபா அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, காவலர்களை கையோடு அழைத்து வந்துள்ளார். 

விரைந்து வந்த காவலர்கள் குழந்தையை மீட்டு, இறக்கமற்ற சுதாவை கைது செய்தனர். உடம்பு முழுவதும் சிராய்ப்புகளுடனும், காயங்களுடனும் மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் குழந்தைகள் நல காப்பகத்திற்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளது. போலீஸார் கூறுகையில், குழந்தைகளை தத்துக்கொடுக்கும் காப்பகங்கள் மீண்டும் அந்தக் குழந்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை சென்று பார்க்காமல் இருப்பதும் இதுபோன்ற குற்றங்கள் நிகழக் காரணம் எனக் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com