பாலியல் புகார்: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்

பாலியல் புகார்: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்
பாலியல் புகார்: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்
Published on

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் மீதான பாலியல் புகார் விவகாரத்தில், பிரச்னை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

பாலியல் புகாருக்கு உள்ளான சென்னை ஆசிரியர் கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் இருவரிடமும் முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தொலைப்பேசி வாயிலாக விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அவர் தற்போது பிரச்னை குறித்தான உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பள்ளியிடம் இருந்து விளக்கம் கிடைத்தப்பிறகு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். 

புகாரின் பின்புலம்:

சென்னை கே.கே.நகரிலுள்ள பிஎஸ்பிபி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ராஜாகோபாலன் என்பவர், ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், வகுப்பறையில் பாடமெடுக்கும்போதும், மாணவிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில், அவர்களின் தோற்றத்தைப் பற்றி கருத்து தெரிவித்தல், தவறான நோக்கத்துடன் மாணவிகளைத் தொடுதல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

பள்ளி நிர்வாகம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள முன்னாள் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகள் விபரம் வெளிப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com