மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

அறந்தாங்கி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆடு மேய்க்கச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தங்கராஜ்(25) என்ற இளைஞரை அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை குற்றவாளி தங்கராஜ் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து குற்றவாளிக்கு 5(K), 5(L) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சத்தியா தீர்ப்பளித்தார்.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி சத்தியா உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி தங்கராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com