ஒரே நாளில் ஏழு குழந்தை திருமணம்; அதிரடி காட்டிய காவல்துறை

ஒரே நாளில் ஏழு குழந்தை திருமணம்; அதிரடி காட்டிய காவல்துறை
ஒரே நாளில் ஏழு குழந்தை திருமணம்; அதிரடி காட்டிய காவல்துறை
Published on

ராமநாதபுரத்தில் 15 மணி நேரத்திற்குள் நடைபெற இருந்த 7 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளன.


குழந்தை திருமணங்கள் நடைபெற இருந்த தகவல், குழந்தை திருமணம் தடுப்புத்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில் மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி உத்தரவிட, அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள், குழந்தை திருமண தடுப்பு அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோர் சேர்ந்து திருமணம் நடைபெற்ற இடங்களுக்கு சென்றனர். பின்னர் குழந்தை திருமணம் நடத்தக்கூடாது எனவும், அதனால் ஏற்படும் தீமைகளை சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தனர். அத்துடன் திருமணம் நடத்த மாட்டோம் பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

இன்று திருமணம் நடைபெற இருந்த 17 வயது சிறுமிகள் 5 பேர் இந்த ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு படிக்க இருப்பதாகவும், 15 வயதுச் சிறுமிகள் இருவர் 10ஆம் வகுப்பு படிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிறுத்தப்பட்ட 7 குழந்தை திருமணங்கள் :

1, நயினார்கோயில் அருகேயுள்ள கிளியூரை சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் பாலமுருகன் (30) என்பவருக்கும், சிறுமியின் வீட்டில் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

2, ராமேஸ்வரம் தீவு பாம்பன் பகுதியை சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும், மதுரையை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் (25) என்பவருக்கும் பாம்பனில் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.


3, முதுகுளத்தூர் ஒன்றியம் புல்வாய்க்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த பழனி மகன் முரளி (25) என்பவருக்கும், புல்வாய்க்குளம் பெருமாள் கோயிலில் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

4, கடலாடி தாலுகா தேவர் நகர் பகுதியை சேர்ந்த 15 வயதுச் சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் பழனிவேல் (30) என்பவருக்கும் சிறுமி வீட்டில் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

5. சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தை சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அழகுராஜா (25) என்பவருக்கும் குருவாடியில் உள்ள சிறுமியின் வீட்டில் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

6, கமுதி சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதுச்சிறுமிக்கும், விருதுநகர் மாவட்டம் தும்சப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி (29) என்பவருக்கும் கமுதியில் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

7, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே கீழப்பெருங்கரையில் வசிக்கும் 15 வயதுச் சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த 28 வயதுடைய அச்சிறுமியின் உறவினரான இளைஞர் ஒருவருக்கும் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com