திருப்பூர்: கெட்டுப்போன முட்டை விநியோகம் செய்ததாக புகார் - சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்

திருப்பூர்: கெட்டுப்போன முட்டை விநியோகம் செய்ததாக புகார் - சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்
திருப்பூர்: கெட்டுப்போன முட்டை விநியோகம் செய்ததாக புகார் - சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்
Published on

திருப்பூர் மாநகராட்சி வாவிபாளையம் அரசு பள்ளியில் கெட்டுப்போன முட்டைகளை மாணவர்களுக்கு விநியோகித்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மகேஷ்வரி என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியை சேர்ந்த வாவிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 26.10.2021 அன்று 57 பயனாளிகளுக்கு முட்டைகளை விநியோகம் செய்யும்போது அழுகிய முட்டைகள் இருந்ததாக குற்றச்சாட்டு வெளியானது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் சத்துணவு நேர்முக உதவியாளர் சிவசண்முகம், சமூக நலத்துறை இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தார்.

அந்த அறிக்கையில், அக்டோபர் மாதத்திற்கான சத்துணவு முட்டைகள் 18.10.2021 அன்று 178 பயனாளிகளுக்கு 10 முட்டைகள் வீதம் 1780 முட்டைகள் வாவிபாளையம் பள்ளிக்கு விநியோகஸ்தரால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 25.10.2021 அன்று 50 மாணவ மாணவியர்களுக்கு தலா 10 முட்டைகள் வீதம் 500 முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 26.10.2021 அன்று 57 மாணவியர்களுக்கு தலா 10 முட்டைகள் வீதம் 570 முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய முட்டைகளில் 10 அட்டைகளில் உள்ள 300 முட்டைகள் கெட்டுப்போனதாக அமைப்பாளரால் அறியப்பட்டு பள்ளிக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போடப்பட்டது என்றும், அழுகிப்போன முட்டைகள் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெட்டுப்போன முட்டைகளுக்கு பதிலாக புதியதாக முட்டைகள் விநியோகஸ்தரால் மாற்றித் தரப்பட்டு நேற்றைய தினமே விடுபட்ட 61 மாணவியர்களுக்கு வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது வருவதாகவும் சமூக நலத்துறை இயக்குநருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெட்டுப்போன முட்டைகளை மாணவ மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படாமல் இருந்தாலும், உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் குப்பைத்தொட்டியில் முட்டைகளை வீசியதற்காகவும், சத்துணவு முடைகளுக்கான பதிவேடுகளை முறையாக பராமரிக்காமல் விட்டதற்காகவும் சத்துணவு பொறுப்பாளர் மகேஷ்வரி என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com