ஆன்லைன் டிரேடிங் பெயரில் தொழிலதிபர்களை குறிவைத்து மாபெரும் மோசடி! சிக்கிய கும்பல் - நடந்தது என்ன?

Whatsapp குழு ஆரம்பிச்சி ஆன்லைன் டிரேடிங்னு ஆசை வார்த்தைகளை சொல்லி, பிஸ்னஸ்மேன் கிட்ட கோடிக்கணக்குல மோசடி செஞ்ச கும்பல், கிரைம் போலீஸ்கிட்ட சிக்கியிருக்காங்க.
ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடிபுதியதலைமுறை
Published on

Whatsapp குழு ஆரம்பிச்சி ஆன்லைன் டிரேடிங்னு ஆசை வார்த்தைகளை சொல்லி, தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்குல மோசடி செஞ்ச கும்பல், கிரைம் போலீஸ்கிட்ட சிக்கியிருக்காங்க. மக்கள் எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கனும்ன்னு இந்த குற்றச்சம்பவம் உணர்த்தியிருக்கு.

"நீங்க முதலீடு செய்யுற பணத்தை விட 500 மடங்கு லாபங்க" இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகளை சொல்லி பிஸ்னஸ்மேன்கள மட்டுமே குறிவைச்சி மோசடி செஞ்சிருக்காங்க இந்த கும்பல். சேலத்தை சேர்ந்த ட்ரேடிங் தொழிலதிபர் ஒருத்தருக்கு கடந்த ஏப்ரல்ல, வெளிநாட்டைச் சேர்ந்த இளேடா என்ற பெண், வாட்ஸ் அப்ல கான்டாக்ட் பண்ணியிருக்காங்க.

தொழிலதிபர் பற்றிய details-அ சரியா சொன்ன இளேடா, நானும் டிரேடிங் பிசினஸ் தான் செய்றேன், என்னோட நீங்களும் ஜாயின் பண்ணா, பல மடங்கு லாபம் பாக்கலாம்ன்னும் சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்லாம, உலக அளவிலான டிரேடிங் பிசினஸ் செய்யுற பிசினஸ்மேன்களுக்கென பிரத்யேகமா உருவாக்கியிருக்கிற வாட்ஸ் அப் குரூப்பல உங்களையும் சேர்த்துறேன், அது மூலமா எனது நண்பர் உங்களுக்கு guide பண்ணுவார்ன்னும் சொல்லியிருக்காங்க.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இளேடா சொன்னபடியே, அந்த சேலம் தொழிலதிபர் கிட்ட இன்னொரு நபர் பேசியிருக்காரு... "Black Rock Asset ManagementBusiness School" என்ற கம்பேனி ரன் பண்றதா அறிமுகம் ஆயிருக்காரு. எங்க கம்பேனில முதலீடு செஞ்சவங்க, சில மாதங்கள்லேயே பல கோடி ரூபாய் லாபம் பார்க்குறாங்கன்னும், நீங்களும் முதலீடு செஞ்சா, 2 மாசத்துல 500 மடங்கு லாபத்த அள்ளலாம்னும் ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டிருக்காங்க..

இதெல்லாம் போதாதுன்னு, எங்க கம்பேனி SEBI-யால் அப்ரூவ் செய்யப்பட்டதுன்னும், லாபத்தில மட்டும் எனக்கு 20 பர்சென்ட் தரனும்ன்னும் சொல்லி, "BRIIFLPRO" என்ற app-அ download பண்ண வைச்சிருக்காரு. இத முழுசா நம்புன, அந்த தொழிலதிபரும், app மூலம் பல்வேறு தவணையா பதினான்கரை கோடி ரூபாய் இன்வெஸ் செஞ்சிருக்காரு.

இதுக்கு அப்புறம்தான் ட்வீஸ்ட் நடந்திருக்கு. இன்வெஸ்ட் பண்ணுன பணத்தை பத்தி சேலம் தொழிலதிபர் கேட்டப்போ, சரியான பதிலும் வரல இன்வெஸ்ட் பண்ண பணமும் கிடக்கல. இதுக்கு அப்புறம்தான், தாம் ஏமாற்றபட்டுருக்கோம்ன்னு தெரிஞ்ச அந்த தொழிலதிபரு, சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காரு.

இது குறித்து சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் பேசும் பொழுது

”பணப்பறிமாற்றம் இந்திய ரூபாயில் இருப்பதால் எத்தனை சீக்கிரம் நீங்க கம்ளைண்ட் பதிவு செய்றீங்களோ உடனடியாக பணத்தை முடக்க செய்யலாம். பெட்டிசன் பதிவு செய்து அந்த அமௌண்டை திரும்ப பெறலாம்.”

சேலம் தொழிலதிபர் கிட்ட, பதினான்கரை கோடி ரூபாய் பணமும் 13 பேங்க் அக்கவுண்ட்ல மாறி மாறி போயிருக்குறது தெரியவந்திருக்கு.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

முதன்முதலா பணம் டிரான்ஸ்பர் ஆன அக்கவுண்ட், செங்கல்பட்டை சேர்ந்த சுப்ரமணியன்னு ஒருத்தரோடது. அவரை கைது செஞ்சி விசாரிச்சப்போ, அடுத்தடுத்து பணம் டிரான்ஸ்பர் ஆன வகையில, மதன், சரவண பிரியன், சதீஷ், ஷாபகத், மணிகண்டன்னு 5 பேரு சிக்கினாங்க. இவங்க எல்லாருமே, பிஸ்னஸ் மேன்களை மட்டுமே குறி வைச்சி மோசடி செய்யுற கும்பல்னு தெரியவந்துச்சி.

"அக்கவுண்ட் ஹோல்டரை கிரிமினல்ஸ் முதலில் தொடர்பு கொள்ளும் பொழுது, உங்க அக்கவுண்டை வாடகைக்கு கொடுங்கள் உங்களுக்கு நாங்க இத்தனை ரூபாய் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். மேலும் நிறைய வங்கிகளில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி கொடுத்தால் நாங்கள் அதற்கான பணத்தை உங்களுக்கு தருகிறோம் என்று கூறுவார்கள். இந்த பணத்திற்காக ஆசைப்பட்டு சிலர் தங்களின் வங்கி கணக்கை கிரிமினல்ஸிடம் கொடுப்பார்கள். போலிஸ் கைது செய்தால் முதலில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களைதான் கைது செய்வார்கள்"

மோசடி கும்பல் யுஸ் பண்ன அக்கவுண்ட் நம்பர்களை வச்சி விசாரிச்சப்போ, மதுரை விக்னேஷ், உத்தரப்பிரதேசம் ஹிராசிங் தானிக், சங்கீத் ஜெயின் னு, இடைத்தரகர்களை அடையாளம் கண்டிருக்கு போலீஸ். விக்னேஷ், ஹிராசிங் தானிக், ரெண்டு பேரும் ஏற்கனவே ஒரு ஆன்லைன் மோசடி வழக்கில ஜெயில்லதான் இருக்காங்க. இவங்கள சென்னைக்கு கொண்டு வந்து விசாரிக்க முடிவு செஞ்சிருக்குற, போலீஸ் டீம், இதன் பின்னணில இருக்குற கும்பலை பிடிக்க முனைப்போட இருக்காங்க...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com