மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் உர விற்பனையில் ரூ.22 லட்சம் மோசடி செய்த முதுநிலை வேளாண் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் (இப்கோ.... INDIAN FARMERS FERTILISERS CO- OPRATIVE) மூலம் கிராமப் புறங்களில் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய இடுபொருட்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை இப்கோ இ-பசார் என்னும் துணை நிறுவனம் மூலம் தமிழகத்தில் வேளாண் இடுபொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் செயல்பட்டு வரும் இ-பசாரில் நாமக்கல் லைன் தெருவைச் சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு (30). ஏன்பவர் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில்இருப்பு உள்ளதாக பொய் கணக்கு காட்டியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த இ-பசார் மாநில அலுவலர் புன்னம்ராஜு கொகக்கரராயப்பேட்டை கிளை அலுவலகத்தில் தணிக்கை செய்தார். அப்போது உர விற்பனை செய்து பணத்தை கட்டாமல் சீனிவாசன், தனது இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளது தணிக்கையில் தெரியவந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புன்னம்ராஜூ புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பபிரிவு துணை கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் விசாரணை செய்து ரூ. 21,91,711 பணத்தை கையாடல் செய்ததாக சீனிவாசனை கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.