கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் – திருவள்ளூர் எஸ்.பி

கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் – திருவள்ளூர் எஸ்.பி
கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் – திருவள்ளூர் எஸ்.பி
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.

கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 166 பேர் மீது 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.16,59,400  மதிப்பிலான 171 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக  25 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும், 1 கார் மற்றும் 25 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  எஸ்.பி வருண்குமார் தெரிவித்தார்.

கஞ்சா விற்பனை தொடர்பான தகவல்களை 6379904848 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அதுபற்றிய ரகசியம் காக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com