ஜம்தாரா கொள்ளையர்களை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கியுள்ளனர் சென்னை காவல் ஆணையர்.
பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஜம்தாரா கொள்ளையர்கள் 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கொல்கத்தாவுக்கு சென்று கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த சைபர் கிரைம் பிரிவு காவல்துறையிரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கி உள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் நாகஜோதி தலைமையில் சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டி வெகுமதியோடு சான்றிதழ் வழங்கினார்.
இதைப்போல பல்வேறு வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ததற்காக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை ஆணையர் பாலசுப்ரமணியம், தலைமையிலான போலீசாருக்கும், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி தடுப்புப்பிரிவு துணை ஆணையர் மீனா தலைமையிலான போலீசாருக்கும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்து பொதுமக்களின் நிலங்களை மீட்டுக் கொடுத்த மத்திய குற்றப்பிரிவின், நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு, சைபர் குற்றப்பிரிவு மற்றும் நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவின் 57 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளார்.