திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்த அவதூறு பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய R.B.V.S.மணியன்!

அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலின பழங்குடியினர், பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S.மணியன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, செப். 25-க்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது
R.B.V.S.மணியன்
R.B.V.S.மணியன்முகநூல்
Published on

சென்னை தியாகராயநகரில் செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர், பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார்.

ஆர்.பி.வி.எஸ். மணியன்
ஆர்.பி.வி.எஸ். மணியன்முகநூல்

இதனடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

R.B.V.S.மணியன்
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு: ‘ஆன்மீக சொற்பொழிவாளர்’ ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது!

இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மணியன் தரப்பில் வழக்கறிஞர் ஆர் சி பால் கனகராஜ் ஆஜராகி, மணியனின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி மணியன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

காவல்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, மணியனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் சாசனம் என்றாலே அம்பேத்கர் தான் நினைவுக்கு வரும் நிலையில் அவரை மணியன் இழிவுப்படுத்தி உள்ளதாக கூறினார்.

திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்த அவதூறு பேச்சு
திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்த அவதூறு பேச்சு முகநூல்

மேலும், மணியன் சார்பில் சமர்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் அனைத்துமே 2021ம் ஆண்டு சேர்ந்தவை என்றும் மணியனின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து ஜாமீன் கோரிய மணியனின் மனு மீது செப்டம்பர் 25ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com