11 வயதில் அப்பாவையே கொன்றவன்: சுட்டுக் கொல்லப்பட்ட தாதாவின் திக் திடுக் கதை!

11 வயதில் அப்பாவையே கொன்றவன்: சுட்டுக் கொல்லப்பட்ட தாதாவின் திக் திடுக் கதை!
11 வயதில் அப்பாவையே கொன்றவன்: சுட்டுக் கொல்லப்பட்ட தாதாவின் திக் திடுக் கதை!
Published on

டெல்லியில் பிரபல தாதா ராஜேஷ் பார்தி உள்பட அவன் கூட்டாளிகள் 4 பேர் என்கவுன்டரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ராஜேஷ் பற்றி திக் திடுக் கதைகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில், பிரபல தாதா ராஜேஷ் பார்தி உட்பட தேடப்படும் குற்றவாளிகள் சிலர், தெற்கு டெல்லியின் சத்தார்பூரில் காரில் செல்வதாக போலீ சாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அந்தக் காரை சிறப்புக்குழு போலீசார் விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். அப்போது, காரில் இருந்தவர்கள், போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காருக்குள் இருந்த வர்கள் மீது, போலீசார் துப்பாக்கியால் திருப்பிச்சுட்டனர். இதில், காருக்குள்ள இருந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சுட்டுக் கொல்லப்பட்டுள்ளவர்களில் பிரபல தாதா ராஜேஷ் பார்தியும் ஒருவன். இதற்கு முன்பும் தன்னை பிடிக்க வந்த போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி இருக்கிறான் ராஜேஷ். இவன் மீது 25 கொலை வழக்குகள் உள்ளன. மற்றும் கொள்ளை, கடத்தல், கார் திருட்டு, மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஹரியானா சிறையில் இருந்தும் தப்பியவன் இவன்.

ஹரியானாவில் உள்ள ஹிந்த் பகுதியை சேர்ந்த ராஜேஷ், சிறு வயதிலேயே கொலைகாரனாக மாறியவன். 1993 ஆம் வருடம் தனது 11 வயதில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவனது தந்தை அவனை அடித்துள்ளார். இந்தக் கோபத்தில், பெற்ற அப்பாவையே குத்திக் கொன்றுள்ளான். இதற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சில வருடங்கள் இருந்த ராஜேஷ், பிறகு படிப்படியாக பெரிய குற்றவாளியாக மாறியுள்ளான்.

கடந்த சில நாட்களுக்கு முன் துவாரகாவில் தொழிலதிபர் ஒருவரை கொன்ற வழக்கில் அமன் கட்காடி என்ற ஆசாத்தை போலீசார் கைது செய்த னர். துல்லியமாக குறிபார்த்து சுடும் திறமைகொண்ட ஆசாத், ராஜேஷ் பார்தியின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது அவனிடம் நடத்திய மேலும் பல தகவல்கள் வெளியாயின.

டெல்லியில் பிரபல தாதாவான நீரஜ் பவனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இன்னொரு தாதாவான ஜிதேந்திர கோகி யா டெல்லியை விட்டு வெளியே சென்றுவிட்டான். இவர்கள் டெல்லியில் இல்லாததால், அவர்களை விட டெல்லியில் தனது ஆதிக்கத்தை பெரிதாக்க வேண்டும் என்று நினைத்துள்ளான் ராஜேஷ். அதனால் டெல்லியில் உள்ள தொழிலபதிபர்கள் சிலரிடம் மிரட்டி பணம் பறித்துள்ளா ன். அதோடு தாவூத் இப்ராஹிமின் டி கம்பெனியுடனுடனும் தொடர்பில் இருந்துள்ளான். 

டெல்லியில் சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் ஒருவனை கடத்தி வைத்துக்கொண்டு அவனது தந்தையான தொழி லதிபரிடம், ரூ.3 கோடி கேட்டு மிரட்டியுள்ளான் ராஜேஷ் பார்தி. இந்த தகவலை அவர் போலீசிடம் தெரிவித்தார். பிறகு போலீசாரின் ஆலோச னைப்படி, அந்த தொழிலதிபர் 35 லட்சம் கொடுக்க முன் வருவதாக பேசியுள்ளார். இதையடுத்து அவனைப் பிடிக்க போலீசார் பொறி வைத்திருந் தனர். அப்போதுதான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான் ராஜேஷும் அவன் கூட்டாளிகளும்.

இந்த என்கவுன்டர் மூலம் மற்ற ரவுடிகள், தலைநகர் டெல்லியில் பீதியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com