பதவி உயர்வில் சிக்கல், கடன் தொல்லை - மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் விபரீத முடிவு

பதவி உயர்வில் சிக்கல், கடன் தொல்லை - மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் விபரீத முடிவு
பதவி உயர்வில் சிக்கல், கடன் தொல்லை - மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் விபரீத முடிவு
Published on

ஆவடி அருகே வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி பகுதியையடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (40). இவர் சேப்பாக்கம் மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அருண்குமார் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பணியில் பதவி உயர்வு கிடைக்காததாலும், கடன் தொல்லை இருந்ததாலும் அவர் விரக்தியில் இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இன்று காலை அவர் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி கதவை திறந்து பார்துள்ளார். அப்போது மின்விசிறியில் தூக்கிட்டு அருண்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கூச்சலிட்ட அவரது மனைவியின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர். பின்னர் அவர்கள் பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் காவல்துறையினர் அருண்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதவி உயர்வு இல்லை, கடன் தொல்லை என மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com