கையூட்டு பெறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

கையூட்டு பெறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
கையூட்டு பெறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
Published on

கையூட்டு பெற்றுக் கொண்டு சட்டவிரோதச் செயல்களை அனுமதிக்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமை எச்சரித்துள்ளது.

தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து மாவட்ட காவல் தலைமையகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் காவலர்கள் எவ்வளவு தொகையை கையூட்டாக பெறுகிறார்கள் என்ற விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சொத்து தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெறப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுவிற்பனைக்கு 60ஆயிரம் ரூபாயும், மணல் கடத்தலுக்கு 30ஆயிரம் ரூபாயும், சூதாட்டம், விபத்து தொடர்பான வழக்குகளில் 10ஆயிரம் ரூபாய் வரையும் கையூட்டு பெறப்படுவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சேலம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், அதிகாரிகள் அனைவருக்கும் சுற்றறிக்கைகளை அனுப்பி உள்ளனர். அதில் காவல் நிலையங்களில் எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை, 100 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெறுவது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கையூட்டு பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயல்களுக்கு துணை போவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com