ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா மாநிலம் கடப்பா அருகே உள்ள கனுமலோபல்லா பகுதியில் செம்மரம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அவ்வழியாக சென்ற வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டேங்கர் லாரி ஒன்றை சோதனை செய்த போது, அதற்குள் 95 செம்மரக்கட்டைகளை நூதனமாக கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் செம்மரங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த கவால்துறையினர், கடத்த முயன்ற செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்தனர். அத்துடன் செம்மரங்களை கடத்தி வந்த 7 பேரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் தொடர்பாக கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.