ஆசைக்கு இணங்க மறுத்த 17 வயது இளம்பெண் கொலை... தம்பதியர் கைது

ஆசைக்கு இணங்க மறுத்த 17 வயது இளம்பெண் கொலை... தம்பதியர் கைது
ஆசைக்கு இணங்க மறுத்த 17 வயது இளம்பெண் கொலை... தம்பதியர் கைது
Published on

டெல்லியில் சித்தப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட 17 வயது இளம்பெண்ணை கொலைசெய்த தம்பதியரை திங்கட்கிழமை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

டெல்லி நந்தனகிரி பகுதியில் வக்கீல் போதார்(51) என்பவர் அவருடைய 45 வயது மனைவியுடன் வசித்துவந்தார். மனைவியின் சகோதரி மகளும்(வயது 17) இவர்கள் வீட்டில் தங்கி படித்துவந்தார்.

யாசகம் செய்யும் போதாரின் மனைவி அக்டோபர் 23ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பியபோது அந்த இளம்பெண் வீட்டில் இல்லை. இதுகுறித்து போதாரிடம் கேட்டபோது, அந்த இளம்பெண்ணை உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். ஆனால், திங்கட்கிழமை அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே, போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு சோதனையிட்டதில், அழுகிய நிலையில் அந்த இளம்பெண்ணின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது.

போதாரின் மனைவியிடம் விசாரித்தபோது, 23ஆம் தேதி இரவு தான் வீட்டுக்கு வந்தபோது, இளம்பெண்ணை காணவில்லை என்றும், கணவன் ஆஸ்ரமத்தில் சேர்த்துவிட்டதாகக் கூறியதாவும் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் வக்கீல் போதார் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்ததால் போலீஸாருக்கு இந்த தம்பதியர்மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

ஆஸ்ரமத்தில் விசாரித்தபோது அந்த இளம்பெண்ணை அங்கு சேர்க்கவில்லை என திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர். பிறகு போதாரை பீகாரில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் போலீஸார் கண்டுபிடித்து கைது செய்திருக்கின்றனர். அங்கிருந்து டெல்லிக்குக் கொண்டுவந்து விசாரிக்கையில், அந்த இளம்பெண் தன் மனைவியின் சகோதரி மகள் என்று கூறியிருக்கிறார். மேலும் ஒரு மாதம் முன்பே அந்தப் பெண்ணை தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்த இளம்பெண் மறுத்திருக்கிறார். இந்த விஷயம் போதாரின் மனைவிக்கு தெரியவந்ததால் அவர் மிகவும் கோபமடைந்து போதாரிடம் சண்டையிட்டிருக்கிறார். அந்த இளம்பெண்ணை கிராமத்திற்கு அனுப்பிவிட திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் தன் படிப்பை தொடரவேண்டும் எனக் கூறி ஊருக்குத் திரும்பிச்செல்ல மறுத்திருக்கிறார்.

இதனால் போதாருக்கும், அவர் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஒருநாள் கோபத்தில் அந்த இளம்பெண்ணை கொன்றுவிடுமாறு தன் மனைவி கூறவே போதாரும் அதற்கு ஒத்திருக்கிறார். அக்டோபர் 23ஆம் தேதி தன் மனைவி வெளியே நின்றுகொண்டு யாராவது வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டிருக்கையில், போதார் வீட்டிற்குள் இருந்த இளம்பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார். ரத்தம் வழிவதைப் பார்த்த அவர், ஒரு போர்வையால் சுற்றி உயிர் பிரியும்வரை வைத்திருக்கிறார். பிறகு வீட்டில் கட்டில் ஸ்டோரேஜுக்குள் மறைத்து வைத்திருக்கிறார். இருவரும் வீட்டிற்குள் படிந்த ரத்தக்கறை மற்றும் கம்பியை சுத்தமாகக் கழுவி துடைத்திருக்கின்றனர். இறந்த பெண்ணின் சடலத்தை அழிக்க சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com