ஏரிக்குள் துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் வழிப்பறி கொள்ளைர்களை பிடிக்க போலீஸார் தீவிரம்

ஏரிக்குள் துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் வழிப்பறி கொள்ளைர்களை பிடிக்க போலீஸார் தீவிரம்
ஏரிக்குள் துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் வழிப்பறி கொள்ளைர்களை பிடிக்க போலீஸார் தீவிரம்
Published on

ஏரிக்குள் துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் வழிப்பறி கொள்ளைர்களை பிடிக்க நூற்றுக்கணக்கான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கசாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வயதான பெண்மணியின் கழுத்திலிருந்து 6 சவரன் தங்க நகையை இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் வழிப்பறி செய்து உள்ளனர். அப்பெண்மணி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த மர்மநபர்களை பிடிக்க விரட்டி சென்றுள்ளனர். தப்பி ஓட முயற்சித்த கொள்ளையர்கள், கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு பொதுமக்களை சுட முயற்சித்துள்ளார். துப்பாக்கியை கண்டதும் பொது மக்கள் பயந்து சிதறி ஓடினர்.

அதன்பிறகு சுங்கச்சாவடி அருகில் உள்ள ஏரி பகுதிக்குள் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிச் சென்று பதுங்கி உள்ளனர். தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து, தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க சுமார் 5 மணி நேரமாக 200க்கும் மேற்பட்ட போலீசார் கொள்ளையனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பி ஓடிய கொள்ளையன் குறித்து எந்த ஒரு பின்புலமும் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் துப்பாக்கி வைத்துள்ள அந்த கொள்ளையனை தங்களது பாதுகாப்புகாக சுட்டு பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com