கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசப்படங்களுடன் இணைத்து வெளியிட்ட போட்டோகிராபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவ்ராவைச் சேர்ந்தவர் சோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரி மாணவியான இவர், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுப்பதற்காக பினோத் சோரன் என்வரது ஸ்டூடியோவுக்கு சென்றார். அடுத்த சில நாட்களில் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதாவது அவரை முகத்தை மட்டும் வெட்டி, ஒட்டி, இந்த நிர்வாணப் படத்தை உருவாக்கியுள்ளது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த சோனாவின் பெற்றோர் கவலையில் மூழ்கினர். இதையடுத்து நண்பர்களின் உதவியுடன் ஹவ்ரா போலீசில் புகார் செய்தார் சோனா.
போலீசார் விசாரித்து போட்டோகிராபர் சோரனை கைது செய்தனர். அவரது அறையை சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து ஏராளமான சி.டி.களை கைப்பற்றினர். அதில் ஏகப்பட்ட மார்பிங் புகைப்படங்கள் இருந்தன. பின்னர் அங்கிருந்த கம்யூட்டர் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி, அறைக்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து இந்த மார்பிங் புகைப்படங்கள் எங்கிருந்து, யாருக்கு அனுப்பப்படுகிறது. பிறகு அங்கிருந்து எப்படி, யாருக்கு பரப்பரப்படுகிறது என்கிற தகவலை தருமாறு ஹவ்ரா போலீஸ், கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக, போலீஸ் கமிஷனர் டி.பி.சிங் தெரிவித்தார்.