சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்து பிளாக்மெயில் - கடிதம் எழுதிவிட்டு ஆற்றில் குதித்த தொழிலதிபர்

சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்து பிளாக்மெயில் - கடிதம் எழுதிவிட்டு ஆற்றில் குதித்த தொழிலதிபர்
சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்து பிளாக்மெயில் - கடிதம் எழுதிவிட்டு ஆற்றில் குதித்த தொழிலதிபர்
Published on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், அச்சக பத்திரிகை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை குருகிராமிற்கு செல்லும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் இறக்கும்முன்பு குறிப்பு ஒன்றையும் வைத்துச் சென்றுள்ளார். ஒரு பெண் உட்பட மூன்று பேர் ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை பிளாக்மெயில் செய்துவருவதாகவும், அந்த தொல்லை தாங்காமல்தான் உயிரைவிட முடிவு எடுத்திருப்பதாகவும், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் அந்தக் குறிப்பில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பெயர் குறிப்பிட்ட மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரித்ததில் பாதிக்கப்பட்டவர் சற்று பிரபலமானவராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட நபர் சர்ச்சைக்குரிய ஒரு வீடியோவை அவருக்குத் தெரியாமல் படமாக்கி அவரிடம் பணம் பறித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

அந்த நபரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண்மணி அதே அலுவலத்தில் அவருடன் பணிபுரிந்த வினோத் குமார் என்பவருடன் சேர்ந்து அவரை மிரட்டியதாகத் தெரியவந்தது. அந்த பெண்ணும், வினோத் குமாரும் ஒரு ஹோட்டலில் அவரை சமாதானப்படுத்தும் நிலையில் ஒரு வீடியோவை சுவாமி என்ற நபரை வைத்து அவருக்குத் தெரியாமல் படமாக்கியதாகவும், அதை வைத்து பாதிக்கப்பட்டவரை பிளாக்மெயில் செய்துவந்ததாகவும் அவர்களை விசாரித்த ஏ.சி.பி கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் அவரிடமிருந்து இதுவரை ரூ.15 லட்சம் பணம் பறித்ததாக இறந்த நபர் குறிப்பில் எழுதியுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சந்தேகத்தின்பேரில் பாலியல் வன்கொடுமை புகாரை கண்டறிந்த ஃபரிதாபாத் காவல்துறை ஆணையர் ஓ.பி. சிங் இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினார். விசாரணையில் இந்த மூன்று நபர்களுக்கு எதிராக பல முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியதன்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் தொழிலதிபரை பிளாக்மெயில் செய்ததை ஒத்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com