திருச்செங்கோட்டில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்த கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வாலரை கேட் பகுதியில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடப்பதாக திருச்செங்கோடு நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முடிவு செய்தனர். இதையடுத்து வாலரை கேட் அருகே உள்ள ரத்தினா டவரில் உள்ள மூன்றாவது மாடியில் மசாஜ் பார்லர் நடத்துவதாக எடுத்த ஒரு அறையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சீருடை அணியாத போலீசார் அதிரடியாக உள்ளே சென்று சோதனை நடத்தினர் சோதனையின் போது மூன்று பெண்கள் ஒரு இளைஞர் இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இணையத்தின் மூலம் விபச்சார தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை மீட்டு நீதிமன்றம் மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். விபச்சார தொழில் நடத்தி வந்த ஐஸ்வர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இணையத்தில் உள்ள லோகாண்டோ என்ற இணையதளம் மூலம் விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விபச்சார கும்பல் வேறு எங்கு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.