”எங்களுக்கே பைன் போடுவிங்களா” - காவல் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்!

”எங்களுக்கே பைன் போடுவிங்களா” - காவல் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்!
”எங்களுக்கே பைன் போடுவிங்களா” - காவல் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்!
Published on

தலைக்கவசம் அணியாமல் சென்றபோது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த நாமக்கல் நகராட்சி ஊழியர், காவல் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் போக்குவரத்து போலீசார் தினசரி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், இன்றும் நாமக்கல் நகர காவல் நிலையம் அருகே திருச்சி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் நகராட்சி பணியாளரான கந்தசாமி என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர் மீது தலைகவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்துள்ளனர்.

அப்போது அவர், தான் நகராட்சி பணியாளர் என்றும் தன்மீது எவ்வாறு வழக்கு பதிவு செய்வீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் கந்தசாமி மீது தலைகவசம் இன்றி வாகனத்தை இயக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.‌

அபராதத்தை கட்டி விட்டுச் சென்ற கந்தசாமி ஆத்திரத்தில் நாமக்கல் போக்குவரத்து காவல் நிலையம் முன்பு, நகராட்சி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி சென்றார். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இது குறித்து நகராட்சி ஆணையர் சுதாவிடம் கேட்ட போது இது தவறான செயல் என்றும், உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, பணியாளர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com