``ஜாகீர் உசைன் மீதான என் புகார் முழுக்க முழுக்க உண்மை” - இசைப்பள்ளி ஆசிரியை சுஜாதா பேட்டி

``ஜாகீர் உசைன் மீதான என் புகார் முழுக்க முழுக்க உண்மை” - இசைப்பள்ளி ஆசிரியை சுஜாதா பேட்டி
``ஜாகீர் உசைன் மீதான என் புகார் முழுக்க முழுக்க உண்மை” - இசைப்பள்ளி ஆசிரியை சுஜாதா பேட்டி
Published on

தமிழ்நாடு கலைபண்பாட்டுத் துறையின் கலையியல் அறிவுறைஞர் ஜாகீர் உசேன் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக, புகாரளித்த  இசைப்பள்ளி ஆசிரியர் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

தமிழ்நாடு கலைபண்பாட்டுத் துறை கலையியல் அறிவுறைஞர் ஜாகீர் உசேன் மீது சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகாரொன்று வைக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து விசாரித்து வந்த காவல்துறையினர், அதன் முடிவில் `ஜாகீர் உசேன் மீது தவறில்லை. அவர் மீது எழுப்பப்பட்டது பொய்யான குற்றச்சாட்டு’ என சில தினங்களுக்கு முன் கூறினர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை தற்போது பேட்டியளித்துளார். அவர் தனது பேட்டியில் “கரூர் அரசு இசைப் பள்ளியில் நடந்த பாலியல் புகார் சம்பவம் முழுக்க முழுக்க உண்மை. ஜாகிர் உசேன் மீது நான் பொய் புகார் அளிக்கவில்லை. விரைவில் இவ்விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

கரூர் தனியார் உணவு விடுதியில் கரூர் இசை பள்ளி பரதநாட்டிய ஆசிரியை சுஜாதா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த செய்திக்குறிப்பில் தெரிவித்த கருத்துக்கள்: நான் கரூர் இசைப்பள்ளியில் பரதநாட்டிய ஆசிரியராக 24 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். கடந்த பிப்ரவரி 28-ம் நேதி எனது பள்ளியில் நடந்த ஆய்வின்போது தமிழ்நாடு கலைபண்பாட்டுத் துறை கலையியல் அறிவுறைஞர் ஜாகீர் உசேன் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அவர் மீது சென்னை கலை பண்பாட்டுத் துணை இயக்குநரிடம் எழுத்து மூலமாக புகார் அளித்தேன். 28.2.22 அன்று நடந்த அந்த பாலியல் புகார் குறித்து, 8.3.22 அன்று புகார் அளித்திருந்தேன்.

அதன் அடிப்படையில், கடந்த நாள்களில் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வந்தன. அனைத்து விசாரணைகளையும் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே தற்போது தொலைக்காட்சிகளில் எனது புகார் தொடர்பாக நடந்த விசாரணை முடிவு குறித்து செய்தி வெளியானது. அதில், `விசாகா கமிட்டி விசாரணை மூலம், எனது புகார் பொய்யானது’ என தெரியவருவதாக செய்தி ஒளிபரப்பானதை பார்த்தேன். இது சம்பந்தமாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன்.

கரூர் இசைப்பள்ளியில் நடந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மை. உண்மைக்கு புறம்பான தகவல்களை நான் புகாரில் தெரிவிக்கவில்லை. எனது புகாரில் இருந்து ஜாகீர் உசேனை காப்பாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக முதல்வர், இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனி சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com