எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்து கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் ரூ. 3 கோடி ரொக்கம் மற்றும் 2.5 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், பணப் பரிவர்த்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான தமிழகம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 45 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஃபெமா எனப்படும் சட்டவிதிகளை மீறி வெளிநாட்டில் பங்குகளை ஒதுக்கியதில் மற்றும் முதலீடு செய்த விவகாரத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் வங்கியின் தலைவராக இருந்தவரும், MGM குழும நிர்வாகியுமான நேசமணி மாறன் முத்து மீது அமலாக்கதுறை வழக்குப்பதிவு செய்து 500 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் இந்த குழுமத்திற்கு சொந்தமாக உல்ள ஓட்டல்களை முறைகேடாக இயக்கியதும் தெரிய வந்துள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.