செயலிகள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை

செயலிகள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை
செயலிகள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை
Published on

பவர் பேங்க் உள்ளிட்ட சில செயலிகள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த அமலாக்கத்துறையினர், கைது செய்து 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர், முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயலிகளால் பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கணக்கானோர், பணத்தை இழந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் அளித்து வந்த நிலையில், தமிழகத்திலும் இந்த பவர் பேங்க் செயலியால் பாதிக்கப்பட்ட பலரின் புகார்கள் குவிந்தன. இந்த மோசடியில் வட மாநில மோசடி கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டு, இறுதியில் இவ்வழக்கு சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு சென்றது. 

அதைத்தொடர்ந்து, பவர் பேங்க் செயலி உட்பட 110 போலி நிறுவனங்கள் பெயரில் போலி செயலிகளை உருவாக்கி அதன் மூலம் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து சீன நிறுவனங்களுக்கு அனுப்பியதாக 11 பேர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவிக் கெடியா, ரொனாக் பன்சால் எனும் இரு பட்டதாரிகள் உட்பட 11 பேரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவிக் கெடியா மற்றும் ரொனாட் பன்சால் இருவரும் சி.ஏ பட்டதாரிகளாவர். ஏற்கெனவே இவர்கள் டெல்லி சைபர் கிரைம் போலீசாரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களேவும் தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான பேரிடம் கைவரிசையை காட்டியது தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவர்களில் முக்கிய குற்றவாளியான சி.ஏ பட்டதாரி அவிக் கெடியாவை விசாரிக்கவே, தமிழக சிபிசிஐடி போலீசார் ஏற்கெனவே டெல்லி நீதிமன்றத்தில் ஆணை பெற்றனர். அதன்படி அவிக் கெடியாவிடம் 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில்தான், அனாஸ் அகமது என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த அனாஸ் அகமது H &S ventures மற்றும் clifford ventures ஆகிய இரு நிறுவனங்களை வைத்து பவர் பேங்க் உள்ளிட்ட மோசடி செயலிகள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்திருந்தார். இதனையடுத்து அனாஸ் அகமதுயும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மோசடி செயலிகள் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது. அதனடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அனாஸ் அகமது மீது அமலாக்கத் துறையினர் கைது செய்து பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அதன்முடிவில் அனாஸ் அகமதை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் அனுமதி பெற்றுள்ளனர்.

முன்னதாக அனாஸ் அகமது மீது அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், H &S ventures மற்றும் clifford ventures என்ற நிறுவனங்கள் மூலம் மோசடி செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் 84 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆனால் அனாஸ் அகமதுக்கு சீன நாட்டினர் உடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் அனாஸ் அகமது மூளையாக செயல்பட்டு இருப்பதாக அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தனக்கு தொடர்புடைய போலி நிறுவனங்கள் மூலம் ஆன்லைன் கேம்கள் மற்றும் மோசடி முதலீட்டு செயலிகள் உருவாக்கி பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடித்து, அனாஸ் அகமது வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அவர் கிரிப்டோகரன்சியாக வெளிநாடுகளுக்கு கொள்ளையடித்த பணத்தை மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனாஸ் அகமது மனைவி Hu Xiolin சீன நாட்டை சேர்ந்த பெண் எனவும் தெரிய வந்துள்ளது. கேரளாவை அடிப்படையாக வைத்து பல்வேறு தொழில்களை செய்து வந்த தொழில் அதிபராக அனாஸ் அகமது இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெங்களூரு போலீசார் இதேபோன்று மோசடி செயலி மூலம் சுமார் 290 கோடி ரூபாய் அளவில் பொதுமக்கள் பணத்தை ஏமாற்றிய விவகாரத்தில் அனாஸ் அகமது, 2 சீன நாட்டினர் மற்றும் 2 திபெத்திய நாட்டினர் என 11 பேரை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இந்த மோசடி செயலி மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததில் தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சீன மற்றும் திபெத்திய நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com