மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்: மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த பெண்

மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்: மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த பெண்
மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்: மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த பெண்
Published on

பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த ஈரோடு பெண்ணுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கோமங்கலம் புதூர். அப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் ஒருவர், கடந்த எட்டு மாத காலமாக சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்துள்ளார். சில வாகனங்களில் மோதியதில் அவருக்கு காயங்களும் ஏற்பட்டன.


இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஷிவாகர் என்ற சமூக ஆர்வலர், ஈரோட்டில் உள்ள தாய்மை அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாய்மை அறக்கட்டளை நிறுவனர் மணிமேகலை, புவனேஷ், சரவணன் ஆகியோர் கோமங்கலம்புதூரில் மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் சுற்றித்திரிந்த பகுதிக்கு வந்தனர்.


பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அவரை அழைத்து வந்த தன்னார்வலர்கள், அவருக்கு முடி வெட்டி குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து. புதுக்கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்லத்தில் விடுவதற்காக அழைத்துச் சென்றனர்.


பல மாதங்களாக கோமங்கலம் புதூர் பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு மறுவாழ்வு கொடுத்த தன்னார்வலர்களுக்கு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com