சென்னை: கொள்ளையடித்த தங்கக் கட்டிகளை 2 மனைவிகளுக்கு பகிர்ந்தளித்த நபர்

சென்னை: கொள்ளையடித்த தங்கக் கட்டிகளை 2 மனைவிகளுக்கு பகிர்ந்தளித்த நபர்
சென்னை: கொள்ளையடித்த தங்கக் கட்டிகளை 2 மனைவிகளுக்கு பகிர்ந்தளித்த நபர்
Published on

சென்னையில் நூதன முறையில் தங்கக் கட்டிகளை கொள்ளையடித்து, இரண்டு மனைவிகளுக்கு பங்குப் போட்டு கொடுத்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பூக்கடை பகுதியில் அமிலம் விற்பனை செய்யும் கடை நடத்திவரும் ராஜேந்திர குமார் என்பவர், 200 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கல்லாப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். கடை ஊழியர் மட்டுமே கடையில் இருந்த நிலையில், தங்கக் கட்டிகளும், 5 லட்சம் ரூபாயும் கொள்ளை போனது. ஊழியரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கடை உரிமையாளர் ராஜேந்திரகுமாரின் நண்பர் எனக்கூறி கடைக்கு வந்த நபர், தேநீர் வாங்கி வரும்படி தன்னை அனுப்பியதாகவும், தேநீர் வாங்கி வந்த பின்னர் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் கள்ளச் சாவி போட்டு கல்லாப்பெட்டியை திறந்து அதிலிருந்த தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. அந்த நபர் பெங்களூருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி முகமது சமீர் என்பதை அறிந்த காவல்துறையினர், அவரை கைதுசெய்து விசாரித்ததில், கொள்ளையடித்த தங்கத்தில் கிடைத்த பணத்தை இரண்டு மனைவிகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com