கோத்தகிரி | வாகன சோதனையின் போது மான் கறியுடன் சிக்கிய நபர் - கடமானை வேட்டையாடியது அம்பலம்!

கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடியதாக எஸ்டேட் மேலாளர் உட்பட 15 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
மான் வேட்டையில் ஈடுபட்டு கைதானவர்கள்
மான் வேட்டையில் ஈடுபட்டு கைதானவர்கள்pt desk
Published on

செய்தியாளர்: ஜான்சன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பொம்மன் (23) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வந்த வாகனத்தில் கடமான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பொம்மனை சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

arrested
arrestedPT DESK

இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் வனத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மார்வாளா தனியார் எஸ்டேட் பகுதியில் கடமானை வேட்டையாடியது தெரியவந்தது, இதையடுத்து பொம்மனை நீலகிரி மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் பொம்மனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மான் வேட்டையில் ஈடுபட்டு கைதானவர்கள்
சென்னை: சூப்பர் மார்க்கெட்டில் நூதன திருட்டு – ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் கைது

அதில், சுருக்குக் கம்பி வைத்து கடமானை தான் வேட்டையாடியதாகவும் அதன் இறைச்சியை உறவினருக்கு எடுத்துச் செல்லும் வழியில் காவல்துறையிடம் சிக்கியதாகவும் கூறியுள்ளார். இதில் தொடர்புடைய ஹாசனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் (38), ஆட்டுக்குமார் (70), அழகன் (60), ஜடைசாமி (45), ஜடையப்பன் (47), ஜான் பிரகாஷ் (24), சந்தோஷ் (28), சின்னப்பன் (43), ஜார்ஜ் (41) உள்ளிட்ட 15 பேரை வனத்துறையினர் கைது செய்து கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com