ராஜஸ்தான்: மதுபோதை தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்

ராஜஸ்தான்: மதுபோதை தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்
ராஜஸ்தான்: மதுபோதை தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்
Published on

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதுபோதையில் ஏற்பட்ட தகராறு முற்றியதால் 25 வயது இளைஞன், தனது 50 வயது தந்தையை குச்சியால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் மற்றும் அவரது தந்தை முகேஷ் வால்மீகி தவறாமல் மது அருந்துவார்கள், இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டையிடுவார்கள் என்று உதயோ நகர் காவல் நிலைய ஆய்வாளர் பிரமேந்திர ராவத் புதன்கிழமை தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ரோஹித் தனது பெற்றோருடன் மோதலில் ஈடுபட்டார், ஆனால் பின்னர் சண்டை ஓய்ந்தது.

இந்த நிலையில் அன்று இரவு வால்மீகியை, அவரது மகன் குச்சியால் தாக்கினார், வால்மீகி மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்றும் ராவத் கூறினார். இன்று காலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் இறந்தவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும் ரோஹித் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com