சென்னையில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

சென்னையில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
சென்னையில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
Published on

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரியான ராஜேஷ் என்பவர் செங்குன்றத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவில் மாணவியிடம் காதலை வெளிப்படுத்தியபோது அவர் ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்திவிட்டு, தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதுதொடர்பான விசாரணைக்குப் பின் ராஜேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனைவரும் கூடும் அண்ணா நகர் டவர் பூங்காவிலேயே பெண் ஒருவர் மீது கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com