சென்னையில் ’வேலைக்கு பெண்கள் தேவை’ என்று செயலி வாயிலாக விளம்பரம் செய்து, பெண்களை நேரில் வரவழைத்து செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வீட்டு வேலைக்குப் பெண்கள் தேவை எனும் விளம்பரத்தைப் பார்த்து தொடர்புகொள்ளும் பெண்களை நேரில் வரவழைக்கும் மோசடி ஆசாமி, ஏழைப்பெண் போல் இருந்தால்தான் வேலை கிடைக்கும் எனக்கூறி, அவர்கள் அணிந்திருக்கும் நகையையும், செல்போனையும் வாங்கிக்கொண்டு, ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு தப்பிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இது தொடர்பான புகார்கள் தொடர்ந்ததால், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து, மோசடியில் ஈடுபட்டுவந்த ஹரிபிரசாத் என்ற நபரைக் கைது செய்தனர்.