காதலி அழைத்ததாக கூறி காதலன் கொலை: பெற்றோர் வெறிச்செயல்

காதலி அழைத்ததாக கூறி காதலன் கொலை: பெற்றோர் வெறிச்செயல்
காதலி அழைத்ததாக கூறி காதலன் கொலை: பெற்றோர் வெறிச்செயல்
Published on

உத்தரப்பிரசேதத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியை அடுத்த கோரவுடா கிராமத்தை சேர்ந்தவர் மோஹித் குமார் (வயது 20). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மோஹித் குமாரிடம் பேசவேண்டும் என அந்த பெண் வீட்டார் கூறியுள்ளனர். பெற்றோர்களின் பேச்சை கேட்டு அந்த பெண்ணும் தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். மோஹித் குமாரும் தனியாக அவர்களது வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.


வீட்டிற்கு வந்த மோஹித் குமாரை காதலியின் பெற்றோரும் சகோதரரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் நிலைக்குலைந்து போன மோஹித் குமார் சுயநினைவை இழந்துள்ளார். சுயநினைவை இழந்த மோஹித்தை தூக்கி சாலையில் வீசியுள்ளனர். சாலையில் காயங்களுடன் கிடந்தவரை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மோஹித் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மோஹித்தின் குடும்பத்தினர் லோஹ்டா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இவர்களது புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் மற்றொரு காவல்நிலையத்திற்கு செல்ல கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த மோஹித்தின் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ஜன்சா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com