மதுரையை உலுக்கிய 6 பேர் தற்கொலை விவகாரத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை உடனடியாக கிடைத்திருந்தால், இத்தனை உயிர்களை பறிகொடுக்க நேர்ந்திருக்காது என்று புகார்கள் எழுந்துள்ளன.
மதுரை யாகப்பா நகரை அடுத்த சௌராஸ்டிராபுரத்தில் கடந்த 24 ஆம் தேதி கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் சிலமணிநேரமாக வராததால் உயிருக்கு போராடியவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்
இந்நிலையில், அதிகாரிகள் அலட்சியமே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய சுகாதார பணி திட்ட இயக்குநர் தாரிஸ் சமன் கூறுகையில், சம்மந்தபட்ட நாளில், நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய ஆம்புலன்ஸ் எங்கு இருந்தது என ஜி.பி.எஸ் கருவி அறிக்கையை பார்த்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.