தீண்டாமை வன்கொடுமை - தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கு முதலிடம்?

தீண்டாமை வன்கொடுமை - தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கு முதலிடம்?
தீண்டாமை வன்கொடுமை - தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கு முதலிடம்?
Published on

தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் கடைப்பிடிக்கப்படும் பத்து மாவட்டங்களில் மதுரை முதலிடம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தமிழகத்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் கிராமங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு அவருக்கு பதில் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதிவரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 43 இடங்களிலும், அதற்கு அடுத்தப்படியாக விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 24 இடங்களிலும் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிராமத்துடன், சென்னை இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com