தமிழ் நாட்டில் அண்மையில் நிகழ்ந்த கள்ள சாராய மரணம் அதிர்சியை ஏற்படுத்திருந்த நிலையில், கள்ள சந்தையில் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளச் சாராயமானது எங்கு எப்படி விற்கப்படுகிறது என்பது குறித்து புதிய தலைமுறையின் குழு புலனாய்வின் மூலம் கண்டறியப்பட்ட ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் புலனாய்வு மேற்கொண்டதில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
முதலாவதாக விழுப்புரம் சென்றோம்...
விழுப்புரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் சாராயம் கிடைப்பது போல் அத்தனை சுலபமாக சாராயமானது சந்தையில் கிடைக்கிறது. ஆனால், விற்பனையில் தான் மாற்றத்தைக்கொண்டு வந்து இருக்கிறார்கள். முன்பு பகிரங்கமாக விற்று வந்த சாராயமானது இப்பொழுது சற்றே மாற்றம் கொண்டு மொபைல் மூலமாக விற்று வருகிறார்கள். போனில் ஆடர் செய்தால் சாராயம் டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
அடுத்ததாக கடலூரில்..
கடலூரில் எங்கள் செய்தியாளார் ஆய்வை மேற்கொண்ட பொழுது, “மது தேவை கிடைக்குமா?” என்று அங்கு நின்றவர்களிடம் கேள்வி எழுப்ப...
“சாராயம் ஈஸியா கிடைக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் 5ம் எண் ஆட்டோ ஒன்று வரும், அதில் சாராயம் வாங்கிக் கொள்ளலாம்” என்றனர்.
அவர்கள் சொன்னது போல் சில நிமிடங்களில் ஒரு ஆட்டோ வந்து சாராயம் சப்ளை செய்துவிட்டு சென்றது.
அடுத்து சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை...
சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இரவு நேரத்தில் அமோகமாக சாராயம் விற்பனை ஆகிறது.
இதை தவிர, குடிசைத் தொழில் போன்று வீடுதோறும் சாராயம் விற்பனை செய்து வருகிறார்கள்.
”இப்படி பகிரங்கமாக விற்பனை செய்கிறீர்களே.... பயமில்லையா?” என்று கேட்டதற்கு,
“போலீஸ் காரர்களுக்கு மாமூல் சரியாக போய்விடும் பயம் எதற்கு?” என்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், சாராயத்திற்கு அக்மார்க் முத்திரைப்போன்று, அதன் வீரியத்திற்கேற்ப பெயரையும் வைத்திருக்கிறார்கள்
கேனில் இருக்கும் சாராயத்திற்கு பெயர் “வேலி முட்டி” இதை அருந்தினால் ராஜ போதை தலைக்கேறுமாம், சுவற்றிலோ அல்லது வேலிலேயோ போய் முட்டிக்கொள்வார்களாம் . அதனால் இதற்கு பெயர் வேலி முட்டி
டாஸ்மாக் மது பாட்டில் போல் இருந்தால் அதன் பெயர் ஷீல்டு
பாக்கெட் சாராயத்துக்குப்பெயர் “பாண்டி ஐஸ்”
எப்படி எல்லாம் சரக்கை விற்பனை செய்யலாம் என்ற விற்பனை உக்தியை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்
இதைப்பட்டி மேலும் தெரிந்துக்கொள்ள கீழ் கண்ட் லிங்கை கிளிக் செய்யவும்.