கோவை சாதிய கொடுமை புகார் - வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை சாதிய கொடுமை புகார் - வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கோவை சாதிய கொடுமை புகார் - வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Published on

கிராம நிர்வாக அலுவலகத்தில், ஊழியர் காலில் விழவைக்கப்பட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர், சொத்து விவரங்களுக்கான சரிபார்ப்புக்காக ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியாக இல்லை என்றும், சரியான ஆவணங்களை தருமாறும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியுள்ளார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை கோபால்சாமி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கையை நீட்டிப் பேசியிருக்கிறார். இடையில் குறுக்கிட்ட கிராம நிர்வாக அலுவலக தண்டல்காரர் முத்துசாமி, அரசு அலுவலரிடம் கையை நீட்டி பேசவேண்டாம் என்று கூறியுள்ளார். அவர் ஏற்கமறுத்ததால் தவறுதாக முத்துசாமி அவரை தள்ளிவிடுகிறார். இதில் கோபால்சாமி அருகில் விழவே ஆத்திரத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துசாமியை சாதிப்பெயரை கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும், தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால், பொய் குற்றச்சாட்டு கூறி வேலையைவிட்டு நீக்கி விடுவதாக கோபால்சாமி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கண்ணீர்விட்டு அழுதபடி மன்னிப்பு கேட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

கிராமநிர்வாக அலுவலகத்தில் நடந்த சாதிக்கொடுமை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் புதியதலைமுறையிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அன்னூர் காவல்நிலையத்திற்குச் சென்று விஏஓ கலைச்செல்வி, முத்துசாமியிடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், கோபால்சாமியை விசாரணைக்காக அழைத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com