கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் காவல் துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் ஆஜராகினர். மேல் விசாரணைக்கு நீண்ட அவகாசம் தேவை என அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்ட நிலையில், விசாரணை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே கோடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினரான ரமேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தொடர்புடைய செய்தி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்