குழித்துறை பகுதியில் காக்கி சீருடையில் சொகுசு வாகனத்தில் வந்து பொதுமக்களிடம் வசூலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் காக்கி சீருடையில் சொகுசு வாகனத்தில் வந்த ஒருவர் போலீஸ் எனக்கூறி வாகன சோதனையில் ஈடுபட்டார். ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் 500 முதல் 5000 வரை கேட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த வாலிபர், போலீஸ் என சொல்லிய நபர் அணிந்திருந்த காக்கி சீருடை மற்றும் அவனது செய்கையில் சந்தேகமடைந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களோடு அவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வன்னியூர் பகுதியை சேர்ந்த பிபின் என்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பதற்கான ஐடி கார்டு ஒன்றை காண்பித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீசாரிடம் பொதுமக்கள் அவரை ஒப்படைத்தனர்.
இளைஞரை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்