பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்தாண்டு அக்டோபரில் கிரீஷ்மா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்கி உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியை ஒட்டிய கேரளப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இந்நிலையில் ஷாரோன் ராஜ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில், கிரீஷ்மாவே திட்டமிட்டு தனது காதலன் ஷரோன் ராஜா கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும், முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதாலும் பழரசத்தில் நஞ்சு கலந்து கொடுத்துள்ளார் என்பதும் அம்பலமானது.
இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய், மாமா ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.