“கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலின் வீடியோக்கள் நீக்கம்

“கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலின் வீடியோக்கள் நீக்கம்

“கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலின் வீடியோக்கள் நீக்கம்
Published on

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செந்தில் பாஸ்கர், சுரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், திநகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை சோதனை செய்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று கறுப்பர் கூட்டம் சேனலை முடக்கக்கோரி யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை வரும் எனத் தெரிகிறது. மேலும், சுரேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com