கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது
Published on

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்து தவறான வதந்திகளை பரப்பிய திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த வாரம் பிளஸ் டூ மாணவி உயிரிழந்தார். இது தொடர்பாக திண்டுக்கல்லை அடுத்துள்ள GTN கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் உதயகுமார் மற்றும் பார்வதி கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் (17 வயதுடைய மற்றொரு கல்லூரி மாணவன் ஆகியோர் சேர்ந்து JusticeSrimathi என வாட்ஸ்அப் குழு ஒன்றை துவங்கியுள்ளனர்.

மேலும் இறந்த மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் குழு டிபியில் வைத்துள்ளனர். மாணவியின் மரணம், போராட்டம் தொடர்பாக பல வதந்திகளை இருவரும் அக்குழுவில் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கல்லூரி மாணவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com