விசாரணை கைதி விக்னேஷ் மரணம்: இபிஎஸ் குற்றச்சாட்டும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமும்

விசாரணை கைதி விக்னேஷ் மரணம்: இபிஎஸ் குற்றச்சாட்டும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமும்
விசாரணை கைதி விக்னேஷ் மரணம்: இபிஎஸ் குற்றச்சாட்டும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமும்
Published on

விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், விக்னேஷ் மரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் 13 இடங்களில் காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தலையில் பலத்த காயம் இருந்தது தெரியவந்துள்ளது என்றார். முதலமைச்சரின் தகவலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களும் முரண்பட்டுள்ளது எனவும், இந்த வழக்கு முறையாக நடைபெற சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் அனைத்து நடவடிக்கையையும் அரசு முறையாக மேற்கொண்டு வருவதாகவும், விக்னேஷ் மரண வழக்கு இன்று கொலைவழக்காக மாற்றப்பட்டு, காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்..

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ், விக்னேஷ் மரண வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், விக்னேஷ் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்காததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்வதாகவும் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com