மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒரு பெண், தனது கணவனைக் கொன்று, இறைச்சிக் கடையில் பணிபுரியும் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரது உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி செப்டிக் டேங்கில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சுனிதா என்ற பெண், ஓட்டுநராக பணிபுரியும் அவரது கணவர் பப்லு ஜாடோனின் உணவில் விஷம் கலந்து கொடுத்து அவர் சுயநினைவை இழந்த பின்பு அவரை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், இறைச்சி கடை நடத்தி வரும் தனது நண்பர்களான ரிஸ்வான் மற்றும் பையுவுடன் சேர்ந்து அவரது உடலை 5 துண்டுகளாக வெட்டினர்.
இவர்கள் உயிரிழந்த ஜடோனின் கால்களையும், கைகளையும் தேவாஸ் பகுதியிலுள்ள காட்டில் வீசினர். பின்னர் சுனிதாவின் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அவரின் உடல் மற்றும் தலை பாகங்களை புதைத்தனர்.
இது தொடர்பாக பேசிய பங்காங்கா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் ராஜேந்திர சோனி, “ கடந்த வியாழன் இரவு குடிபோதையில் இருந்த ஜடோனின் மகன் பிரசாந்த், தன் தந்தையைக் கொன்றது போல் யாருக்கும் தெரியாமல் உன்னையும் கொன்று புதைத்துவிடுவேன் தனது நண்பரிடம் கூறியபோதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுபற்றி பிரசாந்தின் நண்பர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சுனிதா மற்றும் பிரசாந்தை கைது செய்துள்ளோம் ரிஸ்வானும் பையுவும் தலைமறைவாக உள்ளனர். விசாரணையில், சுனிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என தெரிவித்தார்