விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி?

விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி?
விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி?
Published on

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கிளையின் லாக்கரை உடைத்து கடந்த வார இறுதியில் கொள்ளை அடிக்கப்பட்டது. வார விடுமுறை முடிந்து திங்களன்று வங்கியை திறந்த போது கொள்ளை நடந்தது தெரியவந்தது. வங்கியில் இருந்த 40 சவரன் நகை கொள்ளை போனதாக முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது 130 சவரன் நகை கொள்ளை போயிருப்பதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரினை அடுத்து அங்கு பணி புரிந்த துப்புரவு பணியாளர் சபிலால் சந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர். வங்கி சுவரை ஓட்டைப்போட கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டதால் அது எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை முதலில் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் வங்கி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த 2 வீடியோ பதிவுகளிலும் சந்தேகத்திற்கு உரிய வகையில் இன்னோவா கார் ஒன்று தென்பட்டது. இதை கொண்டு சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்யப்பட்டது. இது குற்றவாளிகளை நெருங்க காவல்துறைக்கு உதவியாக அமைந்தது.

விசாரணையில் சபிலால் சந்த் நேபாளத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. பின்னர் நேற்று முன்தினம் இண்டர்போல் உதவியுடன் சபிலால் சந்த் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் கொள்ளையில் நேபாளத்தை சேர்ந்த தேவ் சிங், பீம்லால் படாய்லா, குடுசிங், தேஜ்பகதூர்,கணேஷ் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சபிலால் சந்த்தின் கூட்டாளிகளான பகதூர் மற்றும் பிரதாப் ஆகிய இருவரையும் தனிப்ப‌டை காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.இவர்கள் இருவரும் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அங்காலீஸ்வரி முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சபிலால் சந்த்தையும் சென்னை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொள்ளை நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாக்கரை உடைத்து நடந்த கொள்ளையில் 130 சவரன் நகை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய கொள்ளையன் உட்பட 3 பேர் பிடிபட்ட நிலையில் நேபாளத்திற்கு தப்பிய மற்ற குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் கொள்ளை நடந்து 4 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான வங்கி காவலாளி சபிலால் சந்த் நேபாளத்தில், இன்டர்போல் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளான். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை,, திருவள்ளுர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காவலாளியாகவும் பராமரிப்பு பணியாளராகவும் பணிபுரிந்து சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நடந்து கொண்ட சபிலால் சந்த், கடந்த 5 ஆண்டுகளாக விருகம்பாக்கம் வங்கியில் பராமரிப்பு பணியாளராக வேலை செய்துவந்தார்.

கொள்ளை நடந்தபிறகு தலைமறைவான சபிலால் சந்த்தின் மீது காவல்துறையினர் சந்தேகம் வலுக்க, அவர் நேபாளத்திற்கு தப்பியதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் இன்டர் போல் போலீசாரின் உதவியை நாடினர். அவர்களின் சந்தேக வளையத்தில் சிக்கிய 15 பேரில் ஒருவராக சபிலால் சந்த் சிக்கியதையடுத்து கொள்ளையின் மர்ம முடிச்சுகள் அவிழத்தொடங்கியுள்ளன. நேபாளத்தைச்சேர்ந்த தேவ் சிங், பீம்லால் படாய்லா, குடுசிங், தேஜ்பகதூர், கணேஷ் மற்றும் சிலருக்கு கொள்ளையில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் தேவ்சிங் மற்றும் பீம் லால் படாய்லா இருவரும் தேடப்படும் குற்றவாளிகள் என்றும் தெரியவந்துள்ளது. நேபாளத்திற்கு தப்பிச்சென்ற இந்த குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

இதற்கிடையே வங்கியில் நடந்த கொள்ளையில் முக்கிய தடயமாக சிக்கியது இன்னோவா கார் ஒன்று என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வங்கிக்கொள்ளையின்போது லாக்கர்களை அறுக்க பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்களை வாங்கிய இடம் கண்காணிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியிலும், வங்கி உள்ள பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆராய்ந்தபோது இன்னோவா கார் ஒன்று சந்தேகத்திற்குரிய முறையில் தென்பட்டது. இதனைக் கொண்டு சுங்கச்சாவடிகளின் கண்காணிப்பு கேமிராக்களை இணைத்து விசாரணை நடத்தியபோதுதான், கொள்ளையில் ஈடுபட்ட நேபாளத்தைச் சேர்ந்த டாப் பகதூர் மற்றும் பிரதாப் ஆகியோர் பிடிபட்டனர்.

கொள்ளை நடந்த நான்கே நாட்களில் முக்கிய கொள்ளையர்கள் பிடிபட்டு மற்றவர்களின் தகவலும் கிடைத்துள்ளதையடுத்து தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com