'கேடாய் முடிந்த கூடா நட்பு' ஆண் நண்பர் கொடுத்த பார்சலில் உயர் ரக கஞ்சா – சிக்கிய பெண் ஐடி ஊழியர்!

பெண்கள் வசிக்கும் விடுதியில் வீசிய உயர் ரக கஞ்சா வாசம். சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் சிக்கிய உயர்ரக அசாம் கஞ்சா. ஆண் நண்பர் கொடுத்த பார்சலை வைத்திருந்த பெண் ஐ.டி ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
Accused
Accusedpt desk
Published on

செய்தியாளர்: J.அன்பரசன்

சென்னை சூளைமேடு சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சென்னையில் தங்கி பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனி அறைககளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் சந்தேக நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சூளைமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

Arrested
Arrestedpt desk
Accused
”ஏமாற்றிவிட்டார்கள்” - மஞ்ஞும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

தகவலின் பேரில் சூளைமேடு போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பை கடந்த சில தினங்களாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகியிடம் உரிய அனுமதி பெற்ற போலீசார், பெண் போலீசாருடன் உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு அறையில் இருந்து வித்தியாசமான வாசனை வந்துள்ளது.

இதையடுத்து அறையினுள் சென்ற போலீசார், சோதனை செய்தபோது, அசாம் மாநில நியூஸ் பேப்பர் சுற்றப்பட்டு ஒரு பண்டல் இருந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது, முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த அறையில் இருந்த இளம் பெண்ணிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சூளைமேடு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் புதுக்கோட்டையைச் சேர்ந்த சர்மிளா (25) என்பதும் எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. சர்மிளாவின் தாய் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது, திருத்தணியைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ் என்பவர் சர்மிளாவுக்கு பழக்கமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Accused
மனைவியை மறைத்து சிறுமியைத் திருமணம் செய்த லாரி ஓட்டுநர் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Choolai police station
Choolai police station

பெங்களூருவில் சர்மிளா வசித்து வந்த போது, சுரேஷ் பெங்களூரு சென்று வந்ததும், தற்போது சர்மிளா சென்னை வந்ததும் அடிக்கடி சர்மிளாவை காண சுரேஷ் சூளைமேட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது. தனது நண்பரான சுரேஷ், சில தினங்களுக்கு முன் ஒரு பார்சலை கொடுத்து பிறகு வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு சென்றதாகவும் ஆனால், அது கஞ்சா என தனக்கு தெரியாது எனவும் போலீசாரிடம் சர்மிளா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சர்மிளாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் முதல் தர கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், திருத்தணியில் தலைமறைவாக இருந்த சுரேஷை சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷிடம், அசாமில் இருந்து உயர்தர முதல் கஞ்சா எப்படி கிடைத்தது? எத்தனை ஆண்டு காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com