குடிப்பதற்காக கோயில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது!

குடிப்பதற்காக கோயில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது!
குடிப்பதற்காக கோயில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது!
Published on

முதுகுளத்தூர் அருகே குடிப்பதற்காக கோயில் உண்டியலை உடைத்து திருடிய உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞரை, சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் முத்து இருளாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், கோயிலில் இருந்த உண்டியிலை உடைத்து பணம், தங்கத் தாலி, வெள்ளி கீரிடம் உள்ளிட்டவற்றை திருடி சென்றிருந்தார்.

இதனையடுத்து அதிகாலை கோயிலுக்கு சென்ற பொதுமக்கள் நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞராக உள்ள பரமக்குடி பகுதியை சேர்ந்த சுல்தான் சயது இப்ராஹிம் அலி என்பவர் என தெரிய வந்தது.

இதையடுத்து சுல்தான் சயது இப்ராஹிம் அலியை போலீசார் பிடித்து விசாரணையில் ஈடுபட்ட போது, குடிப்பதற்காக கோயில் உண்டியலை உடைத்து 5750 பணம், தங்கத் தாலி, கண்மலர், வெள்ளி கிரீடம் உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரிய வந்ததால், அவரிடமிருந்து பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது பரமக்குடி பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com